2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சி டிடிவி தினகரன் சொல்கிறார்


2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சி டிடிவி தினகரன் சொல்கிறார்
x
தினத்தந்தி 21 Dec 2017 11:15 AM IST (Updated: 21 Dec 2017 11:15 AM IST)
t-max-icont-min-icon

2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யபட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

சென்னை

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கபட்டது

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தடைந்தனர். சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றம் வந்தடைந்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க தொண்டர்களும் குவிந்துள்ளனர். காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது.

 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது  2 ஜி அலைக்கற்றை முறை கேடு வழக்கில் இருந்து  ஆ.ராசா- கனிமொழி  உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ, அமலாக்கத்துறை தவறிவிட்டது என நீதி மன்றம் கூறி உள்ளது.

இதனை தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்

இந்த தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் கூறியதாவது:-

2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சி. தமிழர்களாக இருந்து விடுதலை பெற்றது மகிழ்ச்சி. எதிர்க்கட்சி என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை என கூறினார்.

Next Story