சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் இலங்கை பக்தர்கள் வருவதற்காக கப்பல் வசதி


சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் இலங்கை பக்தர்கள் வருவதற்காக கப்பல் வசதி
x
தினத்தந்தி 21 Dec 2017 11:03 PM IST (Updated: 21 Dec 2017 11:03 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், வருகிற 24–ந் தேதி முதல் ஜனவரி 3–ந் தேதி வரை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறுகிறது.

புதுடெல்லி, 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், வருகிற 24–ந் தேதி முதல் ஜனவரி 3–ந் தேதி வரை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறுகிறது. இதில், வழக்கமாக இலங்கையில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் சிவ பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வது வழக்கம்.

எனவே, இலங்கையை சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் போக்குவரத்தை இயக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்படி, 24–ந் தேதி முதல் ஜனவரி 3–ந் தேதிவரை யாழ்ப்பாணம்–சென்னை இடையே கப்பல் இயக்கப்படும். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

Next Story