சென்னை ராஜ்பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன், முதல்-அமைச்சர் பழனிசாமி சந்திப்பு


சென்னை ராஜ்பவனில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன், முதல்-அமைச்சர் பழனிசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 23 Dec 2017 9:01 PM IST (Updated: 23 Dec 2017 9:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ராஜ்பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன், முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார்.

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வந்தார்.  ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தார். 

அதைத் தொடர்ந்து  பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். 

இந்நிலையில்  சென்னை ராஜ்பவனில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார்.   ராஜ்பவனில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில்ஜனாதிபதி  மற்றும் முதல்-அமைச்சர் பழனிசாமி பங்கேற்கின்றனர். 

Next Story