தினகரன் அணியின் வெற்றி வாக்கு விற்பனைக்கு கிடைத்த வெற்றி தமிழிசை கருத்து
தினகரன் அணியின் வெற்றி வாக்கு விற்பனைக்கு கிடைத்த வெற்றி என தமிழிசை விமர்சனம் செய்து உள்ளார்.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி ஓட்டுகள் எண்ண தொடங்கியதுமே டி.டி.வி. தினகரன் முன்னிலையில் இருந்தார். இப்போது அவருடைய வெற்றி உறுதியாகிவிட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரம் தொடங்கிய போதே பணப்பட்டுவாடா நடப்பதை சுட்டிக் காட்டினோம். வாக்குகளை சேகரிப்பதைவிட விலைக்கு வாங்குவதில்தான் ஆர்வம் காட்டினார்கள். தேர்தல் முடிவு, வாக்கு விற்பனை வெற்றிகரமாக நடந்ததை எடுத்துகாட்டுகிறது.
ஜனநாயகம் தோற்று பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடை முறைகளே கேள்விக் குறியாக்கப்பட்டு இருக்கிறது. எல்லா நடைமுறைகளையும் தினகரன் மீறியது தெரிந்ததே. பா.ஜனதாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு என்கிறார்கள். இது பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. தமிழகத்துக்கே ஏற்பட்ட பின்னடைவு. எங்களைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் நிர்ணயித்த செலவுத்தொகையை விட குறைவாகவே செலவு செய்துள்ளோம். நேர்மையாக தேர்தலை சந்தித்தோம். நேர்மையாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story