ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்வி:அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அவசர கூட்டம்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக டெபாசிட் இழந்தது.
இந்நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story