ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி: டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், நடனம் ஆடியும் உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னை,
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் இருந்தே அவர் முன்னணியில் இருந்தார். முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கியதும், சென்னை பெசன்ட்நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வெற்றிக்களிப்புடன் வீட்டிற்கு வந்த டி.டி.வி.தினகரனை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேளதாளம் முழங்க டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் ‘வருங்கால முதல்-அமைச்சர் டி.டி.வி.தினகரன் வாழ்க’ என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். பெண் தொண்டர்கள் நடனம் ஆடினர். பட்டாசு சத்தமும், வாழ்த்து கோஷமும் விண்ணை பிளந்தது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பியும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
தினகரனின் வெற்றி செய்தியை தொடர்ந்து, அவரது வீடு முன்பு ஜெயலலிதா-சசிகலா-தினகரன் ஆகியோரின் உருவம் பொறித்த படங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த படங்களை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவரது வீட்டை சுற்றி வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதேபோல், ஆர்.கே.நகர், மெரினா கடற்கரை, வாக்கு எண்ணும் மையம் உள்பட பல்வேறு இடங்களில் டி.டி.வி.தினகரனின் வெற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னை ஆதரித்து வெற்றி பெற செய்தால் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்று கூறி தான் டி.டி.வி.தினகரன் வாக்கு கேட்டார். மக்கள் மகத்தான வெற்றியை அளித்து இருக்கிறார்கள். மாநில அரசு, மத்திய அரசு எல்லாம் துணை இருந்தும் தோல்வியை தழுவியிருக்கும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 60 சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் அங்கு இருக்கிறார்கள். எல்லோரும் இங்கே வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறிய வேலூர் எம்.பி. செங்குட்டுவன் நேற்று மாலை டி.டி.வி.தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மீண்டும் தங்கள் அணிக்கு வந்த வேலூர் எம்.பி.யை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

Related Tags :
Next Story