இரட்டை குழல் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதா? திவாகரன் மகன் ஜெயானந்த்


இரட்டை குழல் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதா?  திவாகரன் மகன் ஜெயானந்த்
x
தினத்தந்தி 25 Dec 2017 10:42 AM IST (Updated: 25 Dec 2017 10:42 AM IST)
t-max-icont-min-icon

திவாகரன் மகன் ஜெயானந்த், முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

சென்னை

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றியால் உற்சாகத்தில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சசிகலாவின் உறவினர்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுவிட்டார் தினகரன். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரத்தில் இளவரசி குடும்பத்தினர் தினகரனுக்கு எதிராக இருந்தனர். கிருஷ்ணப்பிரியாவும்,விவேக்கும் தினகரன் மீது கோபத்தில் இருந்தனர். 

ஆனால் திவாகரன் மகன் ஜெயானந்தோ, தினகரன் தரப்புக்கு ஆதரவாக கருத்துகளை கூறிவந்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் வென்ற நிலையில் இளவரசி குடும்பமும் அவர் பக்கம் சாய தொடங்கிவிட்டது. இந்த வெற்றியின் உச்சத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த் தமது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில்,  ஈபிஎஸ்,ஓபிஎஸ், படத்தைப் போட்டு கீழே, 'இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம்- எடப்பாடி பழனிச்சாமி' என குறிப்பிட்டிருக்கிறார். அதன் கீழே தினகரன், தமது படத்தை போட்டு, இரட்டை குழல் துப்பாக்கி வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்- அதில் குண்டு இருக்கின்றதா? இல்லையா? - ஜெய் ஆனந்த் திவாகரன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயானந்தின் இந்த பதிவு அவரது ஆதரவாளர்களிடையே வைரலாக பரவி வருகிறது.




Next Story