கிரிஜா வைத்தியநாதன் நாளை பணிக்கு திரும்புகிறார்


கிரிஜா வைத்தியநாதன் நாளை பணிக்கு திரும்புகிறார்
x
தினத்தந்தி 9 Jan 2018 10:30 PM GMT (Updated: 9 Jan 2018 9:10 PM GMT)

குட்கா ஊழல் விசாரணை அதிகாரி ஜெயக்கொடி திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் குட்கா விற்பனை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், நேர்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தும்படி சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.ஜெயக்கொடி, விழிப்புப் பணி கமி‌ஷனர் மற்றும் நிர்வாக சீர்திருத்தக் கமி‌ஷனராக கடந்த ஆகஸ்டு 2–ந் தேதியன்று நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் நேற்று அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். நில நிர்வாக ஆணையராக இருந்த மோகன் பியாரே, விழிப்புப் பணி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (10–ந் தேதி) விழிப்புப் பணி கமி‌ஷனர் பதவியை மோகன் பியாரே ஏற்கவுள்ளார்.

தமிழக தொழில் துறை செயலாளராக இருந்த அதுல்யா மிஸ்ரா, அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன், தற்போது தொழில் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்ததால் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் காலில் முறிவு ஏற்பட்டது. எனவே அவர் சில நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தார். எனவே தலைமைச் செயலாளர் பொறுப்பில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் செயல்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவ விடுப்பு முடிந்து நாளை (11–ந் தேதி) கிரிஜா வைத்தியநாதன் மீண்டும் பணிக்குத் திரும்புவதாக கூறப்படுகிறது.


Next Story