மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம் + "||" + Tamil Nadu celebrates Pongal with fervour

பொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். #pongalfestival | #tamilnews
சென்னை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். 

தொடர்ந்து கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடும் நடத்தினர். மேலும் ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பானையடி, கயறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. #pongalfestival | #tamilnews