மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் + "||" + MGR watch People who give ear to hearing

எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள்

எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து  “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம்  கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள்
எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.#MGR #merina


தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு மரணம் அடைந்தார். 

மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள். 

எம்.ஜி.ஆர். இறந்து 31 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் இன்று காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரைக்கு வந்த  பொதுமக்கள் பலர், எம்.ஜி.ஆர் சமாதியில் காதை வைத்து கேட்டனர். குறிப்பாக கிராமப்புறங் களில் இருந்து சென்னைக்கு வருபவர்களிடையே இந்த நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது.

சமாதியில் காதை வைத்து கேட்டு விட்டு ஆமா... எனக்கு கடிகாரம் ஓடுற சத்தம் கேட்டது என்று ஒருவர் கூறியதும், பெரும் பாலானோரும் அதே கருத்தையே பிரதிபலிக்கும் நிலையையே எம்.ஜி.ஆர். சமாதியில் காண முடிகிறது.