ஊரக வேலை உறுதி திட்ட ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஊரக வேலை உறுதி திட்ட ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Feb 2018 7:59 PM GMT (Updated: 2 Feb 2018 7:58 PM GMT)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒதுக் கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் ரூ.55 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இது அதிகம் தான், என்றாலும் ஊரக மக்களுக்கு ஓரளவுக்கு வேலை வழங்குவதற்கு கூட இந்த நிதி போதுமானது அல்ல. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 12.63 கோடி.

இவர்களில் 7.21 கோடி குடும்பங்கள் மட்டுமே இந்த திட்ட பணியை செய்து வருகின்றன. தற்போது ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு எதுவும் செய்ய முடியாது. 12 மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால் இந்த திட்டம் அங்கு கூடுதல் நாட்களுக்கு செயல்படுத்தப்படவேண்டும்.

ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டும்

இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் எந்த வரையரைக்குள்ளும் அடங்காமல் பெயரளவுக்கு மட்டும் ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பது யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை. 2017-18-ம் ஆண்டில் இந்த திட்டத்துக்காக ரூ.48 ஆயிரம் கோடி வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகை முதல் 6 மாதங்களில் செலவழிக்கப்பட்டது. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பயனாளிகள் யாருக் கும் ஊதியம் வழங்கப்படாமல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமே முடங்கிக் கிடக்கிறது.

வரும் ஆண்டில் 6 மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் முடங்கும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையிலும், ஊரக மக்களுக்கு நியாயமான காலத்திற்கு வேலை வழங்கும் வகையிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான ஒதுக் கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story