மாநில செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Rail Service Change Southern Railway Announcement

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, 

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பூங்கா-எழும்பூர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை-தாம்பரம் இன்று இரவு 11.59 மணி, தாம்பரம்-கடற்கரை இன்று இரவு 11.30 மணி, செங்கல்பட்டு-கடற்கரை இன்று இரவு 10.15, 11.10 மணி மற்றும் கடற்கரை-விழுப்புரம் நாளை அதிகாலை 3.55 மணி முதல் மதியம் 12.40 மணி வரையிலான அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம் ரெயில்கள்

செங்கல்பட்டு-கடற்கரை நாளை அதிகாலை 3.55 மணி முதல் காலை 10.50 மணி வரையிலும், தாம்பரம்-கடற்கரை நாளை அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

திருமால்பூரில் இருந்து நாளை மதியம் 1.45 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து நாளை மதியம் 1.55 மணிக்கும் கடற்கரை நோக்கி புறப்படும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து

கூடுவாஞ்சேரி-காட்டாங்கொளத்தூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு இரவு 9.45 மணி மின்சார ரெயிலும், செங்கல்பட்டு-கடற்கரை இரவு 11.10 மணி மின்சார ரெயிலும் 6-ந் தேதி வரை செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரி

திருநின்றவூர்-திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக மூர்மார்க்கெட்- திருவள்ளூர் காலை 9.15, 9.30, 11.30 மணி ரெயில்களும், திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.05, 10.50, 11.25 மணி ரெயில்களும், வேளச்சேரி-திருவள்ளூர் காலை 9.05 மணி ரெயிலும், திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு புறநகர் ரெயில்கள்

செங்கல்பட்டு-எழும்பூர் இன்று இரவு 10.15 மணி, செங்கல்பட்டு-தாம்பரம் இன்று இரவு 11.10 மணி, எழும்பூர்-தாம்பரம் நாளை நள்ளிரவு 12.10, காலை 5.50, 7.35, 8.10, 8.50, 9, 9.25, 10.40, 10.50, 11.30, 11.50 மணி, தாம்பரம்-எழும்பூர் நாளை காலை 4, 4.40, 6.30, 7, 8.15, 10, 10.20, 10.50, 11.10, 11.50 மணி.

எழும்பூர்-செங்கல்பட்டு நாளை காலை 4.50, 5.30, 6.10, 6.40, 6.55, 7.50, 8.35, 9.10, 9.45, 10, 10.25, 11.10 மதியம் 12.10, 12.40 மணி, செங்கல்பட்டு-எழும்பூர் நாளை காலை 3.55, 4.35, 4.55, 5.10, 5.50, 6.40, 7, 7.25, 7.50, 8.25, 8.45, 9.40, 10.50 மணி.

தாம்பரம்-செங்கல்பட்டு நாளை காலை 4.50, 5.55 மணி, செங்கல்பட்டு-தாம்பரம் மதியம் 2.50 மணி. எழும்பூர்-திருமால்பூர் நாளை காலை 7.15 மணி, திருமால்பூர்-எழும்பூர் காலை 5.15, 7.05, 8 மணி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.