மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அண்ணா சமாதியில் அ.தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தினர் + "||" + Edappadi Palaniasamy,O.Paneer selvam Headed the AIADMK paid tribute in Anna Samadhi

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அண்ணா சமாதியில் அ.தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தினர்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அண்ணா சமாதியில் அ.தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தினர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அண்ணா சமாதியில் அ.தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தினர். #AIADMK #ArignarAnna
சென்னை, 

மறைந்த  முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின்  49-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி  முதல்-அமைச்சர்  எடப்பாடி  பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அண்ணா நினைவிடத்தில்  மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் அவைத்தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல்  சீனிவாசன், வைத்திலிங்கம்,  நத்தம் விசுவநாதன்,  தமிழ்மகன் உசேன், ப.வளர்மதி, செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், காமராஜ், செல்லூர் ராஜு, பாண்டிய ராஜன்,   வாலாஜாபாத் கணேசன்,  டி.கே.என். சின்னையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.