நடிகர் கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு


நடிகர் கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு
x
தினத்தந்தி 20 Feb 2018 4:43 AM GMT (Updated: 20 Feb 2018 4:51 AM GMT)

நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். #KamalHasan #Tamilnews

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் நாளை (புதன்கிழமை) புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார். இதையொட்டி அவர் அரசியல் கட்சி தலைவர்கள், தன்னுடைய நலம் விரும்பிகளை சந்தித்து பேசி வருகிறார். 

நேற்று,  அரசியலில் தனிக்கட்சி தொடங்கிய பாக்யராஜ், தனிக்கட்சி நடத்தி வரும் டி.ராஜேந்தர் ஆகியோரிடம் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக பேசினார். தான் தனிக்கட்சி தொடங்கிய பிறகு நேரில் சந்தித்து பேச விரும்புவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கமல்ஹாசனை  இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள  கமல்ஹாசன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 


Next Story