மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே காய்கறிக்குள் வைத்து பிணம் கடத்தல் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர் + "||" + Near Chengalpattu Keep it in the vegetable Corpse trafficking Civilians caught loop

செங்கல்பட்டு அருகே காய்கறிக்குள் வைத்து பிணம் கடத்தல் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

செங்கல்பட்டு அருகே  காய்கறிக்குள் வைத்து பிணம் கடத்தல் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
செங்கல்பட்டு அருகே காய்கறி வண்டியில் முதியவர்கள் பிணம் கடத்தபட்டது. அதனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #TamilNews
சென்னை

சென்னை செங்கல்பட்டு அருகே சென்ற காய்கறி வண்டி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த வண்டியில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என ஒரு பெண் குரல் கேட்டு உள்ளது. உடனடியாக  பொதுமக்கள் சந்தேகம் அடைந்து  வாகனத்தை  பிடித்தனர். அபோது வண்டியின் காய்கறிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ஆண் பிணத்தை , பொதுமக்கள் கைப்பற்றினர். உயிருடன் இருந்த 2 முதியவர்களும் மீட்கப்பட்டனர்.  சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து உள்ளனர். அந்த முதிய பெண்ணும் மீட்கப்பட்டார்.

வயதானவர்களை கொன்று எலும்புகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பல் என  தெரியவந்து உள்ளது.

அந்த மினி லாரியில் இருந்த ராஜேஷ் என்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.  வாகனம் திண்டுக்கல்  ரிஜிஸ்ரேஷன் வாகனம். இரண்டு முதியவர்களும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஆதரவு அற்றவர்கள். என தெரியவந்து உள்ளது.

அந்த வாகனம் ஜெயின் ஜோசப் ஹாஸ்பிக்ஸ் என்ற தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த அமைப்பு  ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள  முதியவர்களை  பராமறிக்கும் நிறுவனமாகும்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் 7 ஆண்டுகளாக புகார் செய்து வந்ததாக கூறப்படுகிறது.