மாநில செய்திகள்

திராவிடத்தையும், தேசியம் இரண்டையும் இழக்கவில்லை கட்சி கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கம் + "||" + Dravidian Nation did not lose both Regarding party flag KamalHaasan explanation

திராவிடத்தையும், தேசியம் இரண்டையும் இழக்கவில்லை கட்சி கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கம்

திராவிடத்தையும், தேசியம் இரண்டையும் இழக்கவில்லை கட்சி கொடி குறித்து கமல்ஹாசன்  விளக்கம்
திராவிடத்தையும், தேசியத்தையும் இழக்கவில்லை; கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே என் கொள்கை என கமல்ஹாசன் கூறினார். #KamalPartyLaunch #MakkalNeedhiMaiam
மதுரை

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரையில் நேற்று துவக்கி அறிவித்த கமல்ஹாசன் இன்று உயர்மட்ட குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது   அவர் கூறியதாவது:-  

"நான் இடதுமல்ல வலதுமல்ல மய்யம் என்று கூறிவிட்டேன். இன்னும் என்ன கொள்கை என்றே கேட்டுக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம். நீங்கள் என்னவெல்லாம் செய்யவில்லையோ அதை செய்வது எங்கள் கொள்கை.உங்களிடம் எதையெல்லாம் எதிர்பார்த்து மக்களுக்கு கிடைக்கவில்லையோ, அதை செய்து கொடுப்பது எங்கள் கொள்கை. 

அடுத்த மாதத்தின் மத்தியில் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம் தொடங்கப்படும் . மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பதவியை நான் வகிப்பேன்.

தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 8 கிராமங்களை தத்தெடுக்க உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மீண்டும் பயணம் செய்ய உள்ளேன்.

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை .

கட்சி கொடியில் உள்ள ஆறு கைகள் ஆறு மாநிலங்கள் என்றும், நட்சத்திரத்தின் எட்டு முனைகள் மக்களை குறிக்கும் என்றும் கூறினார்.
கருப்புன் திராவிடம், சிவப்பு உழைப்பு, வெள்ளை தூய்மை, நட்சத்திரம் மக்கள் என விளக்கம் அளித்தார்.

அதிமுக அமைச்சர்கள் என் மீது வைக்கும் நியாயமான விமர்சனங்களை சரி செய்ய முயல்வேன்

எங்களிடம் ஊழல் இல்லாத அளவிற்கு முதலில் நாங்கள் பார்த்துக்கொள்வோம். என கூறினார்