அனைத்துக்கட்சி கூட்ட விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரிப்பு


அனைத்துக்கட்சி கூட்ட விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2018 11:33 AM GMT (Updated: 22 Feb 2018 11:33 AM GMT)

அனைத்துக்கட்சி கூட்ட விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார். #AllPartyMeet #CauveryIssue

சென்னை

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக பொதுச்செயலளார் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தேமுதிக சார்பில் சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக சார்பில் ஏகே மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது.
 
காலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர்களை தமிழக அமைச்சர்கள் வாசலில் நின்று வரவேற்றனர். தமிழக அமைச்சர்களின் இந்த நாகரீக பண்பு பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உணவு இடைவேளை அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் அளிக்கப்பட்ட இந்த உணவு இடைவேளை விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார்.

விருந்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வெஜிடேபிள் பிரியாணி, வெள்ளை சாதம், காரக்குழம்பு, ரசம், 2 பொரியல் , ஒரு ஸ்வீட், குலோப்ஜாமூன், பீடா, புரூட் சாலட், அப்பளம் , தண்ணீர் பாட்டில் ஆகியவை மெனுக்களாக  இடம்பெற்றன.

ஒரு மணிநேர உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சிகள் தங்களின் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.

Next Story