மாநில செய்திகள்

ஜெயலலிதா படம் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும் : நீதிபதி கருத்து + "||" + Jayalalithaa Portrait film to protest against people It echoes the election Judge commented

ஜெயலலிதா படம் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும் : நீதிபதி கருத்து

ஜெயலலிதா படம் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும் : நீதிபதி கருத்து
சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது தேர்தலில் எதிரொலிக்கும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். #JayaPortrait #TNAssembly #Jayalalithaa
சென்னை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுயர படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. இதை அகற்றக்கோரி தி.மு.க சார்பில் ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று  ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது தேர்தலில் எதிரொலிக்கும், அப்போது படத்தை அகற்றுவது குறித்து சபாநாயகர் முடிவு எடுத்துக் கொள்ளட்டும் என கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் ஜெ. படத்தை அகற்றக் கோரிய வழக்கில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றக்கோரிய மனுக்களின் விசாரணை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.