தமிழக பட்ஜெட் : அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும்


தமிழக பட்ஜெட் : அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும்
x
தினத்தந்தி 15 March 2018 6:14 AM GMT (Updated: 15 March 2018 6:14 AM GMT)

2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #TNBudget2018

சென்னை

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள  அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்  இதுவாகும்

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்  வருமாறு:

* அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும்.

* தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

* ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியை எதிர்நோக்கி மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயிலின் 107.55 கி.மீ. நீள வழித்தடம் அமைக்க மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

* ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும் 

* பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில், 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

* குழந்தைக்களுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ. 200.70 கோடி ஒதுக்கீடு

* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு.

* மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்  குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2 ஆவது மாநிலம் தமிழகம்

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு

Next Story