தமிழக பட்ஜெட் : வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்


தமிழக பட்ஜெட் : வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்
x
தினத்தந்தி 15 March 2018 6:51 AM GMT (Updated: 15 March 2018 6:51 AM GMT)

வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. #TNBudget2018

சென்னை

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள  அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்  இதுவாகும்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்  வருமாறு:-


* நடப்பாண்டில் ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு. 

* 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

* முதலீட்டு மானியம் 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

* கைத்தறி உதவி திட்டம் என்ற புதிய திட்டத்தை ரூ.40 கோடியில் தமிழக அரசு செயல்படுத்தும்.

 * கைத்தறி நெசவில் புதுமை முயற்சிகளை ஊக்கப்படுத்த நிதியுதவி அளிக்கப்படும். 

 * கைத்தறி துணி விற்பனை தள்ளுபடி மானியம் 80 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும். 

* பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டப்பணிகள் ரூ. 1,244.35 கோடியில் மேற்கொள்ளப்படும்.

* 16 பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு சாலை இணைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு ரூ.250 கோடி மானியமாக வழங்கப்படும்.

* அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும். 

* வருவாய் துறைக்கு ரூ.6,144.58 கோடி ஒதுக்கீடு.

* விவசாயிகளுக்கு கூட்டுறவு நிறுவனம் மூலம் ரூ.8,000 கோடி பயிர்க்கடன்.

* புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடி ஒதுக்கீடு.

* நியாய விலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு.

Next Story