தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பு: சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும்


தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பு: சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும்
x
தினத்தந்தி 16 March 2018 11:15 PM GMT (Updated: 16 March 2018 8:41 PM GMT)

சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மைய தலைவர் கூறினார்.

சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை கொண்டுள்ளது. மேலும் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு காற்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றும் தென் இந்தியா பகுதியில் சந்திக்கிறது.

இதன் காரணமாக வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழையும் பெய்யும்.சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை அடுத்து 2 நாட்களுக்கு பெய்யும்.

சென்னை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். 

Next Story