அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர்


அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர்
x
தினத்தந்தி 16 March 2018 11:30 PM GMT (Updated: 16 March 2018 8:50 PM GMT)

அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

சென்னை, 

அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

அதன் விவரம் வருமாறு:-

கட்சி அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் பொன்னையன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஜே.சி.டி.பிரபாகர், எம்.பி. டாக்டர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், செய்தி தொடர் பாளர் கோகுல இந்திரா, முன்னாள் வாரியத் தலைவர் ஆதிராஜாராம், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், புத்திசந்திரன் மற்றும் என்.முருகுமாறன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கட்சி கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளராக முன்னாள் அமைச்சர் ஆ.பரஞ்ஜோதி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மீனவர் பிரிவு இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், மகளிர் அணி துணை செயலாளர்களாக எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், டாக்டர் அ.அழகு தமிழ்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ., எல். ஜெயசுதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக சு.ரவி எம்.எல்.ஏ., தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வெல்லமண்டி நடராஜன் விடுவிக்கப்பட்டு ஏற்கனவே அவர் வகித்து வரும் கட்சி அவைத்தலைவர் பொறுப்பில் தொடருவார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ப.குமார் எம்.பி., நியமிக்கப்படுகிறார்.

கட்சியின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, ‘வட சென்னை வடக்கு மாவட்டம்’ என செயல்பட்டு வரும் மாவட்ட கட்சி அமைப்பு, இன்று (நேற்று) முதல் அமைப்பு ரீதியாக ‘வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்’, ‘வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்’ என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

இதில் வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் மற்றும் வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தில் கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் எஸ்.ஆர்.ராஜேஷ், வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக வெங்கடேஷ்பாபு எம்.பி., ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கட்சி மற்றும் சார்பு அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.அலெக்சாண்டர், எம்.எல்.ஏ., (ஏற்கனவே வகித்து வரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்). இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப் பில் இருக்கும் ப.குமார் ஆகியோர் இன்று (நேற்று) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் பணிகளை கவனிப்பதற்காக, ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குழு பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது. எம்.எல்.ஏ., ஜக்கையன், முன்னாள் எம்.பி. யு.ஆர்.கிருஷ்ணன் மற்றும் தாடி ம.ராசு, கா.சங்கரதாஸ் நியமிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் தேனி மாவட்ட செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.பி., சையதுகான், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக ஆ.சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story