மாநில செய்திகள்

டி.டி.வி.தினகரன் அமைப்பு கொடிக்கு எதிராக வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு அனுமதி + "||" + High Court allowed Edappadi palanicami

டி.டி.வி.தினகரன் அமைப்பு கொடிக்கு எதிராக வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு அனுமதி

டி.டி.வி.தினகரன் அமைப்பு கொடிக்கு எதிராக வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு அனுமதி
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு, எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
சென்னை,

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பை மதுரையில் நேற்று முன்தினம் டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அப்போது அந்த அமைப்புக்கான கொடியையும் அவர் வெளியிட்டார். அந்த கொடி, அ.தி.மு.க. கொடியை போல உள்ளதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி, அ.தி.மு.க.வின் கொடியை போல கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளது. அ.தி.மு.க.வின் கொடியை போல வடிவமைப்பை கொண்ட கொடியை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று எங்கள் கட்சியின் 4-வது விதி தெளிவாக கூறுகிறது.

இழப்பீடு

எனவே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கியுள்ள புதிய கொடியை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். அ.தி.மு.க.வின் கொடியில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியதற்காக, ரூ.25 லட்சம் எங்களுக்கு இழப்பீடு வழங்க டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவிட வேண்டும். இந்த சிவில் வழக்கை தொடர எனக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சி.வி. கார்த்திக்கேயன், ‘அ.தி.மு.க. வின் கட்சிக்கொடி தொடர்பாக ஒரு தமிழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்யவேண்டும். அதன்பிறகு இதுதொடர்பாக சிவில் வழக்கை மனுதாரர் தொடரலாம்’ என்று அனுமதியளித்து உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. வளர்ச்சி குறைபாடு உள்ள பெண்ணின் 30 வார கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி
20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி அடைந்த கருவை கோர்ட்டில் முறையான அனுமதி பெற்றபின்னரே கலைக்க முடியும்.
2. எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது ஐகோர்ட்டில் தி.மு.க. மனு
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று ஐகோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது.
3. மக்கள் நலத்திட்டங்களை கவர்ச்சி திட்டங்களாக கருதக்கூடாது எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை கவர்ச்சி திட்டங்களாக கருதக்கூடாது என்று 15-வது நிதிக்குழுவிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
அரசின் அலட்சியத்தால் முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தன என்றும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. மக்களுடைய குறைகளை போக்குவதே அ.தி.மு.க. அரசின் லட்சியம் எடப்பாடி பழனிசாமி பேச்சு
விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்றும், மக்களுடைய குறைகளை போக்குவதே அ.தி.மு.க. அரசின் லட்சியம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.