மாநில செய்திகள்

கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது கே.சி. பழனிசாமி நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில் + "||" + Party policy decision Individual can not take KC Palanisamy About the removal of Minister Jayakumar answered

கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது கே.சி. பழனிசாமி நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது  கே.சி. பழனிசாமி நீக்கம் குறித்து  அமைச்சர் ஜெயக்குமார் பதில்
கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது; எடுக்கக்கூடாது கொள்கை முடிவு குறித்து பேசியதால் கே.சி. பழனிசாமி மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #Jayakumar
சென்னை

அதிமுக முன்னாள் எம்பியும் செய்தி தொடர்பாளருமான கேசி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார். கேசி பழனிச்சாமியின் இந்த பேச்சு கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது.

இந்நிலையில் அவரை நீக்கியது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது;-

கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது; எடுக்கக்கூடாது கொள்கை முடிவு குறித்து பேசியதால் கே.சி. பழனிசாமி மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கேசி பழனிச்சாமியின் பேச்சில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். பாஜக நிர்பந்தத்தால் கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி, நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் - அமைச்சர் ஜெயக்குமார்
காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மத்தியக்குழு ஆய்வுக்கு செல்ல முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமத்திற்கும் மத்தியக்குழு ஆய்வுக்கு செல்ல முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3. தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4. எப்போதும் குறை சொல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
எப்போதும் குறை சொல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
5. பிரதமர் மோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் : அமைச்சர் ஜெயக்குமார்
பிரதமர் நரேந்திரமோடி பலசாலியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.