அண்ணா- திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக கூறுவது தவறு -டிடிவி தினகரன்


அண்ணா- திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக கூறுவது தவறு -டிடிவி தினகரன்
x

அண்ணா- திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக கூறுவது தவறு என டிடிவி தினகரன் கூறி உள்ளார். #TTVDhinakaran #AmmaMakkalMunnetraKazhagam

சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தினகரன் மதுரையில் கடந்த 15-ந்தேதி தொடங்கினார். இதன் முதல் ஆலோசனை கூட்டம் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புரட்சித் தலைவி அம்மாவின் நல்லாசியுடனும், சின்னம்மாவின் 
நல்வாழ்த்துக்களுடனும் கழக தோழர்கள் மற்றும் தமிழக மக்கள் பேரெழுச்சியோடும், பேராதரவோடும் அம்மாவின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைக்கவும், அ.தி.மு.க.வை மீட்டெடுக்கின்ற லட்சியத் தோடும் மேலூரில் கடந்த 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல் ஆலோசனை கூட்டம் வருகிற 24-ந்தேதி மாலை 5 மணிக்கு திருச்சி பெமினா ஓட்டல், காவேரி அரங்கத்தில் நடைபெறும். 

கழக வளர்ச்சி பணிகள் குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். புதிய சரித்திரம் படைப்போம், அம்மாவின் நல்லாட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இன்று சென்னையில் நிருபர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் திராவிடம் இருந்தது; அவை எங்களுக்கு கிடைக்கவில்லை. கட்சிப்பெயரை காரணமாகக்கூறி நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தம் அளிக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது இடைக்கால ஏற்பாடுதான். கருப்பு, சிகப்பு நிறம் திமுக கொடியிலும் உள்ளது.அண்ணா- திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக கூறுவது தவறு. 

திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசி உள்ளார்.

ஜெயலலிதாவின் படம் கொண்ட கொடியை எதிர்க்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கு 3 பெயர்களை கொடுத்திருந்தோம், அதில் ஒரு பெயரை தேர்வு செய்தோம். என கூறினார் .

Next Story