அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை- சென்னை வானிலை மையம்


அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை- சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 17 March 2018 8:42 AM GMT (Updated: 17 March 2018 8:42 AM GMT)

அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. #WeatherForecast

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா அருகே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனுடன் மேற்கு திசைக் காற்றும், வங்கக்கடலில் இருந்து வீசும் கிழக்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி தென்இந்திய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்யும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக திருப்பத்தூரில் 8 செ.மீ மழையும், ஓமலூரில் 7 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story