நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியம்- கே.சி.பழனிசாமி


நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியம்- கே.சி.பழனிசாமி
x
தினத்தந்தி 17 March 2018 10:58 AM GMT (Updated: 17 March 2018 10:58 AM GMT)

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியம் ஆகும் என கே.சி பழனிசாமி கூறி உள்ளார். #KCPalanisamy

சென்னை

அதிமுக முன்னாள் எம்பியும் செய்தி தொடர்பாளருமான கே.சி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார். கே.சி பழனிச்சாமியின் இந்த பேச்சு கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது.

கட்சியின் கொள்கை முடிவை தனிநபர் எடுக்க முடியாது; எடுக்கக்கூடாது கொள்கை முடிவு குறித்து பேசியதால் கே.சி. பழனிசாமி மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில்  இன்று கே.சி.பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

 பாஜகவிற்கு எதிராக பேசியது எப்படி அதிமுக கொள்கைக்கு எதிராக பேசியதாக கருத முடியும்?. கட்சி கொள்கைக்கு எதிராக அமைச்சர்கள் பேசும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியம் ஆகும். 

ஆர்.கே.நகர் தேர்தலில் தோல்வியடைந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story