நடிகை பிரியா வாரியார் போல் கண்ணடித்தால் 'சஸ்பெண்டு' கல்லூரி நிர்வாகம் அதிரடி உத்தரவு


நடிகை பிரியா வாரியார் போல் கண்ணடித்தால் சஸ்பெண்டு கல்லூரி நிர்வாகம் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 20 March 2018 11:28 AM GMT (Updated: 20 March 2018 11:28 AM GMT)

நடிகை பிரியா வாரியாரைப் போல கண்ணடிப்பவர்கள் மீது ஒரு வருட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளததால் மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளனர். #Priyawarrier

கோவை

ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

இதில் நடித்துள்ள பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் வீடியோ வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது.மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலை அடுத்து ட்ரெண்டாகி வந்த பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கட்டிப்போட்டுள்ளது.

இந்த பாடல் யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. இவருக்கு தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இதை தொடர்ந்து, பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே விளையாட்டாக கண் அடித்து பலர் சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிடுகிறார்கள். மேலும் கல்லூரி பெண்கள் பிரியா பிரகாஷ் வாரியாரைப் போல கல்லூரி வகுப்பு அறையில் கண்ணடித்து கலவரம் செய்கின்றனர்.

இந்நிலையில், கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்கிறார்களாம்.  கோவை, கோவைப் புதூரில்  உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் நடிகை பிரியா வாரியார் போல் மாணவிகள் யாராவது கண்ணடித்தால் ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இங்கு கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரியில்  ஒழுக்கத்தை கடை பிடித்து வருகிறோம். ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 2017-ம் ஆண்டு குளிர்பானம் தொடர்பாக பிரச்சினை வந்த போது எங்கள் கல்லூரி பெயரில் இப்படி போலியாக சுற்றறிக்கை விடப்பட்டு இருந்தது. அதன் பிறகு எந்த பிரச்சினை வந்தாலும் எங்கள் கல்லூரி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி இவ்வாறு வலை தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இந்த சுற்றறிக்கையில் கல்லூரி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்  ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம். இவ்வாறு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Next Story