சிசிடிவி கேமரா நிறுத்தப்பட்டது தொடர்பாக அப்போலோதான் விளக்கம் அளிக்க வேண்டும் - டிடிவி தினகரன்


சிசிடிவி கேமரா நிறுத்தப்பட்டது தொடர்பாக அப்போலோதான் விளக்கம் அளிக்க வேண்டும் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 22 March 2018 1:53 PM GMT (Updated: 22 March 2018 1:53 PM GMT)

சிசிடிவி கேமரா நிறுத்தப்பட்டது தொடர்பாக அப்போலோதான் விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார். #TTVDhinakaran #JayalalithaaDeath


சென்னை,


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 
ஆணையத்திடம் சசிகலாவின் வாக்குமூலத்தை அவரது வழக்கறிஞர் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் மருத்துவமனையில் 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி. ரெட்டி  செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டிருந்தது என்றார். 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்போலோ சிறப்பு கவனம் கொடுத்தது. அப்போலோ மருத்துவர்களும் வெளிநாட்டு மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்தனர். அவர் உடல் நலம் தேறி வருவதற்கு அப்போலோ பல வாரங்களாக சிகிச்சை அளித்தது. அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். சிசிடிவி காட்சிகளை சம்பந்தமில்லாதவர்கள் பார்க்க நேரிடும் என்பதால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது. 

அதனால், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக எந்தவித சிசிடிவி காட்சிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிசிடிவி கேமரா விவகாரத்தில் நாங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் கவலைப்பட ஒன்றும் கிடையாது. ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி அணைக்கப்பட்டது பற்றி அப்போலோ நிர்வாகம்தான் பதிலளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.   


Next Story