தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்துள்ளது - மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு


தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்துள்ளது - மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 March 2018 5:04 AM GMT (Updated: 23 March 2018 5:04 AM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமல், தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது என தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். #DMK #Stalin

சென்னை
 
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு திமுக காரணமில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருப்பதற்கு திமுகதான் காரணம் என அதிமுக கூறுவது பொய்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமல், தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது, 29ம் தேதி வரை பொறுத்திருங்கள் என துணை முதல்வர் சொல்கிறார்.

மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் ஈரோடு மண்டல மாநாடு இருக்கும். ஈரோடு மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துக் கொள்ள மாட்டார்.

மண்டல மாநாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை  தீர்மானமாக நிறைவேற்றப்படும். என கூறினார்.

Next Story