விவசாயிகளுக்கு வேளாண் தகவல்களை வழங்கும் செயலி எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்


விவசாயிகளுக்கு வேளாண் தகவல்களை வழங்கும் செயலி எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 8 April 2018 4:30 AM IST (Updated: 8 April 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு வேளாண் தகவல்களை வழங்கும் செல்போன் செயலியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.

சென்னை,

ஜெயலலிதா 2016-ம் ஆண்டு சட்டசபை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், குறித்த காலத்தே விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், குழாய் கிணறுகள் அமைக்கவும் தேவையான எந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக, விவசாயிகள் ஒரு மீட்டருக்கு ரூ.130 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் குழாய் கிணறுகள் அமைக்க வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்ட சுழல் விசைத்துளைக் கருவிகள் பொருத்தப்பட்ட 10 வாகனங்கள்.

மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகையில் 50 டிராக்டர்கள் மற்றும் அதற்கேற்ற பண்ணைக் கருவி களான 150 ரோட்டவேட்டர்கள், 150 ஐந்துகொத்துக் கலப்பைகள், 50 சட்டிக் கலப்பைகள் மற்றும் 10 வரப்பு அமைக்கும் கருவிகள் ஆகியவை பொருத்தப்பட்ட வாகனங்களை குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5 ஓட்டுனர்களுக்கு சாவிகளை வழங்கி தொடங்கிவைத்தார்.

வேளாண் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடை வதற்காக, உழவன் என்ற கைபேசி செயலியை (ஆப்) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுக்கப்பட்டுள்ள உழவன் செயலி மூலம் விவசாயிகள், வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், டிராக்டர், பவர் டில்லர் போன்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்ற உட்கட்டமைப்புகளை மானியத்தில் பெறுவதற்கு முன் பதிவு செய்தல், பயிர் காப்பீடு செய்த விவரங்கள் அறிதல்,

அரசு மற்றும் தனியார் கடைகளில் விதை, உர இருப்பு விவரங்கள், வேளாண் எந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக்கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை தொடர்புகொள்ளும் வசதி, விளைபொருட்களின் சந்தை விலை விவரங்கள், தங்களது பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நில வரங்களை அறியும் வசதி, வேளாண் விரிவாக்க பணியாளர்கள் வருகை விவரம் போன்ற 9 வகையான சேவைகளை பெற்று பயன்பெறலாம்.

உழவன் கைபேசி செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோர்’ மூலமாக கைபேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அம்மா உயிர் உரங் கள் வினியோகத்தை 5 விவசாயிகளுக்கு வழங்கி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 15 ஏக்கர் நிலப்பரப்பளவில் குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களுடனும், சிறந்த கலைநயமிக்க வடிவமைப்புடனும், சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story