காவிரி பிரச்சினைக்கும் முடிவு வந்து விடும் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
உரிமை மீட்பு பயணம் முடியும் நேரத்தில் காவிரி பிரச்சினைக்கும் முடிவு வந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருச்சி,
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சி முக்கொம்பு பகுதியில் இருந்து ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’, தொடங்கியபோது பேசியதாவது:-
காவிரி பிரச்சினை குறித்து வரும் 9-ந் தேதி (நாளை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கப்பட இருக்கிறது. எனவே, இந்தப் பயணம் முடிவடைகின்ற நேரத்தில், அல்லது ஒருவேளை பயணம் முடியும் முன்பாகவே, நாம் எதிர்பார்க்கின்ற வகையில், நாமெல்லாம் மகிழ்ச்சியடையும் ஒரு நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று நாம் நம்புகிறோம்.
அப்படி வரவில்லை என்றால், இந்த நடைப்பயணத்தை நாம் இன்னும் விரிவாக்கி, தமிழ்நாடே குலுங்கும் வகையில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் சூழ்நிலை நிச்சயம் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுப்ரீம் கோர்ட்டு தெளிவான, இறுதியான தீர்ப்பை வழங்கியதும், அதனை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி தெரிவித்தார். அவர் மட்டுமல்ல, மத்திய நீர் வளத்துறை மந்திரி நிதின் கட்காரியும் அறிவித்தார். அந்தத் துறையின் செயலாளர் அறிவித்தார். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு இதனை கண்டிக்கக் கூட முன் வரவில்லை என்றால், இதைவிட அவமானம் வேறென்ன இருக்க முடியும்.
மத்திய அரசை கண்டித்து, விமர்சித்து, வேண்டுகோள் வைக்க வேண்டாம், ஆனால், அழுத்தம் தருகின்ற வகையில் ஒரு தீர்மானத்தையாவது அமைச்சரவையில் நிறைவேற்றும் துப்பு கூட இந்த ஆட்சிக்கு இல்லை. எனவே, எதிர்க்கட்சிகளான நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தும் வகையில் படிப்படியாக பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், முழு அடைப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்துகிறோம். தொடர்ந்து, காவிரி உரிமை மீட்புப் பயணத்தை இன்று தொடங்கி இருக்கிறோம். திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இந்தப் பயணத்தை தொடங்கி வைப்பதோடு, கடலூரில் அதனை முடித்து வைக்க உள்ளார். எனவே, இந்தப் பயணம் முடியும் நேரத்தில், இந்தப் (காவிரி) பிரச்சினைக்கும் ஒரு முடிவு வந்துவிடும் என்று நாம் நம்புகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Tags :
Next Story