காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth
சென்னை,
தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடந்த மவுன போராட்டத்தில் பங்கேற்க செல்லும்போது, நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதி தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. அதற்கான திட்டங்களை தீட்ட மத்திய அரசாங்கத்தை அறிவுறுத்தியது. மத்திய அரசு காலத்தை வீணாக்கி வருகிறது.
மத்திய அரசாங்கம் அனைத்து தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையும், வலுவான குரலுமான காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் அமைக்காவிட்டால் அனைத்து தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் ஆளாகுவீர்கள். அதை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
கட்சிகள், வியாபாரிகள், விவசாயிகள் சங்கங்கள் மற்ற எல்லாரும் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் யாருக்காக நாம் போராட்டம் செய்கிறோம் என்று சரியாக வெளியே தெரியவில்லை. 100, 50, 20 ஏக்கர் வைத்து இருக்கும் விவசாயிகளுக்காக நாம் போராடவில்லை. கால், அரை ஏக்கர், முக்கால் ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக போராடுகிறோம்.
அவர்களை போராட்டத்தின் முன்பாக நிறுத்துங்கள். அவர்களின் கஷ்டங்கள், கண்ணீர், வேதனையை காட்டுங்கள். அப்படி செய்தால் தான் இந்த போராட்டங்களுக்கு வலுகிடைக்கும். ஏழை விவசாயிகளின் கஷ்டங்கள், ஆதங்கங்களை கர்நாடக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அங்கு இருக்கும் ஏழை விவசாயிகள் புரிந்துகொள்வார்கள். இது நம்முடைய போராட்டத்துக்கு வலுசேர்க்கும்.
இயற்கை, இறைவன் இரண்டுமே ஒன்றுதான். தண்ணீர், நெருப்பு, நிலம், பூமி, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் அடங்கியது தான் இயற்கை. இதன் மூலம் தான் மனித உடல் உருவாகிறது. இதில் எதாவது ஒன்று கெட்டுபோனால் கூட உலகம், மனித உடல் அழிந்துவிடும். ஆக நிலம், நீர், காற்றுக்கு கெடுதல், மாசு செய்ய யார் முயற்சித்தாலும் விடவே கூடாது.
இதனால் பல லட்சம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்கும் வந்தாலும் சரி, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும் சரி அந்தமாதிரி திட்டங்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. இதுபோன்ற தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் பணம் சம்பாதிக்கலாம். நிம்மதியாக இருக்கமுடியாது. அவர்கள் சந்ததி நன்றாக இருக்காது.
அதற்காக தொழிற்சாலைகளே வேண்டாம் என்று சொல்லவில்லை. நிலம், நீர், காற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லாத தொழிற்சாலைகள் அமைக்கலாம்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் எதுவும் போராட்டம் அறிவிப்பீர்களா?
பதில்:- இந்த முறை இவர்களுடன் சேர்ந்துதான் நான் செய்கிறேன்.
கேள்வி:- காவிரிக்காக நீங்கள் குரல் கொடுத்தற்காக கர்நாடகாவில் உங்களுடைய படத்தை திரையிட விடமாட்டோம் என்று அங்கு சிலர் கூறுகிறார்களே?
பதில்:- நான் எதுவும் தப்புசெய்யவில்லை. நியாயமான கோரிக்கைக்காக குரல் கொடுக்கிறோம். அப்படி அவர்கள் தடுத்து நிறுத்தினால், தயாரிப்பாளர்கள் பார்த்து கொள்வார்கள். அதையும் மீறி தடுத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இருக்கும். அதை கர்நாடக அரசு பார்த்து கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கேள்வி:- கர்நாடக தேர்தலை குறிவைத்து தான் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- அதற்குள் நான் போக விரும்பவில்லை. எல்லாமே அரசியல் தான்.
வேண்டுகோள் என்ன?
கேள்வி:- பிரதமர் நரேந்திரமோடிக்கு நீங்கள் வைக்கும் வேண்டுகோள் என்ன?
பதில்:- காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதுதான்.
கேள்வி:- அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை நியமித்தது தொடர்பாக எதிர்ப்பு வலுத்து இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- இந்தியாவில் எல்லா மதத்தினரும், சாதியினரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எந்த மாநிலத்தவரும் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றலாம். பல்கலைக்கழகத்தில் அரசியல் நுழையக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் பிரச்சினையாகி கொண்டு இருக்கும் நேரத்தில், கர்நாடகத்தில் இருந்து ஒருவரை உயர் பதவியில் நியமித்தது சரியான நேரம் இல்லை.
கேள்வி:- ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக நீங்கள் கூறிய கருத்துக்கு, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் இருந்து உங்களுக்கு விளக்கம் கொடுத்து இருந்தார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- அவர்கள் பதில் கூறி இருக்கிறார்கள். அதற்கு நன்றி. ஆனால் அவர்களுடைய விளக்கத்தை சரியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கேள்வி:- ஆன்மிக அரசியலை ரஜினிகாந்த் முன்னெடுத்தால், நான் எதிர்ப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறி இருக்கிறாரே?
பதில்:- நான் அவரை எதிர்க்கமாட்டேன். கமல்ஹாசன் எனக்கு எதிரியே கிடையாது. என்னுடைய எதிரி ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது தான். நிறைய பேசினால் நிறைய எதிரிகள் வருவார்கள். அதுபோன்ற ஆள் நான் இல்லை. நிறைய பேசி பேசியே அரசியல் செய்துவிட்டார்கள். பேசும் அரசியல் போதும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து விளையாடலாம்
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்திடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அவர், ‘தமிழ்நாடே காவிரிக்காக போராடி கொண்டு இருக்கும், இந்த சூழ்நிலையில் ஐ.பி.எல். போட்டியை நிறுத்தினால் நல்லது. அப்படி இல்லை என்றால், தமிழக மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து விளையாடினால் இந்தியா முழுவதும் எல்லோரும் பார்ப்பார்கள். அதற்கு பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். நிர்வாகம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒத்துழைப்பு தரவேண்டும். அப்படி இல்லை என்றால் அதை பார்க்க போகும் இளைஞர்கள் கருப்பு துணி அணிந்து போவது நல்லது என்பது என்னுடைய கருத்து’ என்றார்.

Related Tags :
Next Story