காவிரி விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது-மு.க.ஸ்டாலின்


காவிரி விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது-மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 April 2018 5:11 PM IST (Updated: 9 April 2018 5:11 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருப்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #CauveryMangementBoard #CauveryIssue #MKStalin

அம்மாபேட்டை

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது.  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருப்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.மத்திய அரசு தமிழர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

காவிரி விவகாரத்தில் தாமதம் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் . காவிரி விவகாரத்தில் மே.3ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story