கல் எறிவது போன்ற வன்முறை போராட்டத்தை ஏற்க முடியாது என பாரதிராஜா திட்டவட்டம்


கல் எறிவது போன்ற வன்முறை போராட்டத்தை ஏற்க முடியாது என பாரதிராஜா திட்டவட்டம்
x
தினத்தந்தி 10 April 2018 6:20 PM IST (Updated: 10 April 2018 6:20 PM IST)
t-max-icont-min-icon

கல் எறிவது போன்ற வன்முறை போராட்டத்தை ஏற்க முடியாது என இயக்குநர் பாரதிராஜா கூறினார். #CauveryManagementBoard #CSKvsKKR


சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவிட மாட்டோம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த சவாலான நிலையில் காவல்துறை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு பாதுகாப்பை அதிகரித்தது. பாதுகாப்பு உயர்த்தப்பட்ட நிலையிலும் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிக்கெட் மைதானம் நோக்கிய வாலாஜா சாலைக்கு அணி அணியாக போராட்டக்காரர்கள் சென்றனர். அங்கு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற போது தடியடி நடத்தப்பட்டது. அங்கு பதட்டமான நிலையே தொடர்கிறது. பாதுகாப்புக்கு மத்தியில் ரசிகர்கள் மைதானமும் சென்று வருகிறார்கள். போராட்டம் காரணமாக அண்ணாசாலை ஆட்டம் கண்டு உள்ளது. 

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, இயக்குனர்கள் போராடி வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. போராட்டத்திற்கு இடையே சென்னை வீரர்கள் மைதானம் வந்து உள்ளனர். 

போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், கல் எறிவது போன்ற வன்முறை போராட்டத்தை ஏற்க முடியாது என்றார். ஐபிஎல் போட்டிக்கு எதிராக கண்ணியமான முறையில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம். போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் உள்ளே நுழைந்திருக்கலாம் என்றார். கவிஞர் வைரமுத்து பேசுகையில்,காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஸ்கீம் என்றாலும் ஒன்றுதான். போராட்டம் கிரிக்கெட்டுக்கு எதிரான கிடையாது. காவிரிக்கு ஆதரவான போராட்டமாகும். 
நீதி கேட்டு போராட்டம் நடத்ததான் வீதிக்கு வந்துள்ளோம் என்றார். போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. 

Next Story