தமிழிசைக்கு பா.ஜனதா தலைவர் அமித் ஷா பாராட்டு


தமிழிசைக்கு பா.ஜனதா தலைவர் அமித் ஷா பாராட்டு
x
தினத்தந்தி 10 April 2018 9:15 PM IST (Updated: 11 April 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் தாமரை யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு தமிழிசைக்கு பா.ஜனதா தலைவர் அமித் ஷா பாராட்டு தெரிவித்து உள்ளார். #TamilisaiSoundararajan #BJP


சென்னை,


தமிழக பாரதீய ஜனதா கட்சியின் பேஸ்புக்கில் வெளியிட்டு தகவலில், இன்று டெல்லியில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பாஜக தேசிய தலைவர் திரு. அமித் ஷா அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது கடந்த 45 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 40,000 வாக்குச்சாவடிக்கான பொறுப்பாளர்களையும், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து தமிழ் தாமரை யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு திரு. அமித் ஷா அவர்கள் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

மேலும் கடந்த ஞாயிறு அன்று வேளச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய 49 மாவட்ட தலைவர்களுக்கும், கோட்ட பொறுப்பாளர்களுக்கும், கோட்ட அமைப்பு செயலாளர்களுக்கும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து நினைவு பரிசை வழங்கியதை அமித் ஷா அவர்களிடம் மாநில தலைவர் பகிர்ந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story