தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது அடையாறு புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி பேச்சு


தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது   அடையாறு புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 12 April 2018 2:10 PM IST (Updated: 12 April 2018 2:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு நிதியை குறைத்து விட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். #PMModi #NarendraModi #AIIMS

சென்னை

அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. பின் அவர் விழாவில்  ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துகளை கூறி சென்னை அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளில், புற்றுநோய் சிகிச்சை பிரதானமாக இருக்கும்  .

நோய் தடுப்பு வசதிகளை வீட்டின் அருகே அமைத்து தருவதே அரசின் மருத்துவக் கொள்கை; தமிழக முதல்வரோடு ஆலோசித்து மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் 

தமிழகத்திற்கு நிதியை குறைத்துவிட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது . நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளப்படும்.

நாம் எல்லோரும் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்குவோம்; அதுவே நம் விடுதலை போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் 

அடையாறு புற்றுநோய் மையத்திற்கு உதவ வேண்டும் என சாந்தா கோரிக்கை விடுத்திருந்தார்; அவரது கோரிக்கைகளை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும்.

புற்றுநோயை தடுக்க அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார்; 10 கோடி குடும்பங்கள் பயன்பெற புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் என கூறினார்.

Next Story