காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விருதுநகரில் சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளிப்பு
காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து விருதுநகரில் சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். #CauveryProtest
விருதுநகர்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில், விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரவணன் சுரேஷ்(வயது 50) என்ற நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்குளித்ததில் 80 சதவீத காயம் அடைந்த சரவணன் சுரேஷ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story