பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கே எதிரானவை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்


பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கே எதிரானவை  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்
x
தினத்தந்தி 13 April 2018 3:20 PM IST (Updated: 13 April 2018 3:20 PM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கே எதிரானவை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #JusticeForAsifa

சென்னை,

காஷ்மீரில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது.  

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனிதகுலத்திற்கே எதிரானவை. இக்கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். 

பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் பெண்மையை பேணிக் காப்போம் என பதிவிட்டுள்ளார்.

Next Story