கவர்னர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் புத்தாண்டையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ் புத்தாண்டு தினமானது ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் நாளன்று நமது மக்களிடையே அமைதி, வளம், மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த புத்தாண்டு தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை, நற்சிந்தனை, வெற்றி ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்யும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story