விஷு திருநாள்; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


விஷு திருநாள்; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 14 April 2018 1:26 PM IST (Updated: 14 April 2018 1:26 PM IST)
t-max-icont-min-icon

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “விஷு” தினத்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy

சென்னை,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள விஷு தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

புத்தாண்டு திருநாளாம் “விஷு” திருநாளை உற்சாகமாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “விஷு” தினத்திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

எவ்விடத்தில் வாழ்ந்தாலும் தங்கள் பாரம்பரியத்தையும், மரபுகளையும் பேணிப் பாதுகாத்து வாழும் மலையாள மொழி பேசும் மக்கள், புத்தாண்டு திருநாளான “விஷு” திருநாளன்று, அதிகாலை கண் விழித்து அரிசி, காய்கனிகள், கண்ணாடி, கொன்றை மலர்கள், தங்க நாணயங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக்கனி கண்டு, புலரும் இப்புத்தாண்டு அனைத்து நலங்களையும் வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும் என்று இறைவனை பக்தியுடன் வழிபட்டு, குடும்பத்தினருடன் அறுசுவை விருந்துண்டு “விஷு” தினத்தை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.

இப்புத்தாண்டு, மலையாள மொழி பேசும் மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அவர்களுக்கு எனது இனிய “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story