புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. #Jallikattu
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. தொடக்க விழாவிற்கு அமைச்சா் விஜயபாஸ்கா் தலைமை தாங்கி தொடங்கி வைத்தாா்.
மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000க்கும் அதிகமான காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் வந்திருந்தனா். மேலும் அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில் மருத்துவ குழுக்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் ஆகியவையும் தயாா் நிலையில் உள்ளன.
Related Tags :
Next Story