காவிரி விவகாரம்; ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்: மு.க. ஸ்டாலின்


காவிரி விவகாரம்; ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்:  மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 April 2018 8:27 PM IST (Updated: 16 April 2018 8:27 PM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin

சென்னை,

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்ள தி.மு.க சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் ம.தி.மு.க, வி.சி.க. மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என கூறினார்.

அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது மற்றும் காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Next Story