நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அமைச்சர் அன்பழகன்


நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அமைச்சர் அன்பழகன்
x
தினத்தந்தி 17 April 2018 11:33 AM IST (Updated: 17 April 2018 12:05 PM IST)
t-max-icont-min-icon

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் அன்பழகன் கூறி உள்ளார். #Nirmaladevi

சென்னை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தும் வகையில் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக அதிகாரிகளை அனுசரித்து சென்றால், மதிப்பெண் மற்றும் பணம் ஆகியவை தருவதாக அவர் பேசிய ஆடியோ வைரலானது.

இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. எனவே பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் பன்வாரிலால், இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார்.

 பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை ஸ்டாலின் விமர்சித்தார்.  கவர்னரின் இந்த உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தும் . பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில், விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையது எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் உறுதியாக தெரிவித்தார்.

Next Story