வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறுஆய்வு மனு
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்கிறது.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் ஆகியோர் கடந்த மாதம் 20-ந் தேதி தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்வதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
இத்தகைய வழக்குகளில் அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு முன்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும்; அத்துடன் உரிய உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டி பெற்றுத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும், ஒருவர் மீதான, இந்த சட்டப்படியான வழக்கில் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்றாலோ, நீதிமன்றத்தின் பரிசீலனையில் புகாரில் கெட்ட நோக்கம் இருக்கிறது என்று தெரிய வந்தாலோ, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்க தடை இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஏதும் அறியாத அப்பாவி மக்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் அதில் விளக்கப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவு நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சி இது என்ற குற்றச்சாட்டை அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் முன்வைத்தன.
மேலும் இது தொடர்பாக வட மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. அதில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து பரிசீலிக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம், சென்னை கோட்டையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கே.பி.அன்பழகன், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கூடுதல் டி.ஜி.பி., கே.சி.மகாலி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வன் கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் முடிவில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் பேரில் தமிழக அரசின் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரின் நலனைக் கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்நாட்டின் சார்பாக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் இடம் பெற்று உள்ளன.

Related Tags :
Next Story