முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு


முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 April 2018 5:05 AM IST (Updated: 18 April 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

தொலைதூரம், எளிதில் அணுகமுடியாத மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது 10 முதல் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

சென்னை,

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை எதிர்த்து டாக்டர்கள் சிலர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, ‘இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என ஏற்கனவே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மருத்துவ முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டார்.


Next Story