திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 18 April 2018 5:09 AM IST (Updated: 18 April 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நல்லதீர்வு ஏற்பட்டதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி ஆகியோரை திரைப்படத்துறையினர் நேற்று சந்தித்து பேசினார் கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு இரவு 8.30 மணிக்கு மேல் நீடித்தது.

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் இடையே இருந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் இதில் பங்கு பெற்றன.

இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு நல்ல தீர்வு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு மாத காலத்துக்கு மேலாக நீடித்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து இருக்கிறது. படத்தை வெளியிட ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். வரிசைப்படுத்தி படங்களை வெளியிட 2 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். விரைவில் படத்தை வெளியிடுவார்கள். படப்பிடிப்பும் தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story