ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி ; திமுகவினர் கைது


ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி ; திமுகவினர் கைது
x
தினத்தந்தி 18 April 2018 11:05 AM IST (Updated: 18 April 2018 11:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக புகார் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர். #DMK #BanwarilalPurohit

சென்னை

தமிழக கவர்னரை  திரும்பப்பெற வலியுறுத்தி மா.சுப்ரமணியன் எம்.எல்.ஏ தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர்.
சென்னை கிண்டியில் இருந்து  ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற  800 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

பேரணியின் போது மா.சுப்ரமணியன் கூறியதாவது:-

ஆளுநர் சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டில் ஒன்றுமில்லை என்பதற்காக ஆளுநரே விசாரணைக்குழுவை அமைத்துள்ளார்; புகாருக்கு உள்ளான ஆளுநரே விசாரிக்க உத்தரவிடலாமா?

ஆய்வு எனக்கூறி மாநில உரிமைகளில் ஆளுநர் தலையிடுகிறார். தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். என கூறினார்.


Next Story