ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் இருந்தார்கள் என்ற செய்தி தவறானது - ராமமோகன ராவ்


ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் இருந்தார்கள் என்ற செய்தி தவறானது - ராமமோகன ராவ்
x
தினத்தந்தி 18 April 2018 3:21 PM IST (Updated: 18 April 2018 3:21 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் அங்கு இருந்தார்கள் என்று வந்த செய்தி தவறானது என முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் தெரிவித்து உள்ளார். #RamaMohanRao #Jayalalithaa

சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்  விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 100 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதையடுத்து, பூங்குன்றன் மீண்டும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, அவர் இன்று மீண்டும் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நலக் குறைபாடுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். 

அது போல் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வருகை தந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது;-

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அமைச்சர்கள் பலமுறை பார்த்தார்கள் என, நான் சொன்னதாக வந்த தகவல் தவறு. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது மாலை 6 மணிக்குதான் மருத்துவமனை வந்தேன்; அப்போது அமைச்சர்கள் அங்கு இருந்தார்கள் என்று  நான் சொல்லியதாக வந்த செய்திகள் தவறு என கூறினார்.

ஆணையத்தில் ஆஜரான பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வந்தபோது நானும், அமைச்சர்களும் அங்கு இல்லை, தகவல் தெரிந்தபின் தான் மருத்துவமனை வந்தோம்.என கூறினார்.

Next Story