‘பேராசிரியை நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து’ நேரில் சந்தித்த வக்கீல் தகவல்


‘பேராசிரியை நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து’ நேரில் சந்தித்த வக்கீல் தகவல்
x
தினத்தந்தி 19 April 2018 4:00 AM IST (Updated: 19 April 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து நிலவுவதாக, அவருடைய வக்கீல் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து நிலவுவதாக, அவருடைய வக்கீல் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் அழைப்பு விடுத்து பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருடைய வக்கீல் பாலசுப்பிரமணியன் நேற்று மதுரை சிறையில் அவரை சந்தித்துப் பேசினார். பிறகு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி, சிறைக்குள் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அசாதாரண சூழல் நிலவுவதாக என்னிடம் தெரிவித்தார். மேலும், தான் ஆடியோவில் பேசியது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அருப்புக்கோட்டையில் கல்வி நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டியின் காரணமாக தன்னை வைத்து கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

நான் அவரை சந்தித்தபோது, அருகில் ஜெயிலரும், வார்டனும் இருந்ததால் அதிகம் பேச முடியவில்லை.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையின் போது மீண்டும் அவரை சந்தித்துப் பேசுவேன்.

இவ்வாறு வக்கீல் தெரிவித்தார்.

Next Story